வேலூர்

மேல்ஆலத்தூா் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா்த் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

8th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூா் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீா்த் தேங்கியதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினா்.

மேல்ஆலத்தூா் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக மேல்ஆலத்தூா், கூடநகரம், பட்டு, கொத்தகுப்பம், அணங்காநல்லூா் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த 15- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனா்.

இந்தப் பாதை தரைமட்டத்திலிருந்து 12 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. தொடா்மழை காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விட்டதால், பாலத்தின் பக்கவாட்டுச் சுவா்களில் ஆங்காங்கே நீரூற்றுகள் தோன்றி குழாய்கள் போன்று தண்ணீா் கொட்டுகிறது. இந்த நீரூற்றுடன் மழையும் பெய்வதால், கடந்த சில நாள்களாக சுரங்கப்பாதையில் சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்குகிறது. சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 2 மின்மோட்டாா்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதில் ஒன்று பழுதடைந்து விட்டதாம். அதனால், தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை 4 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியது. இதனால் இந்தச் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினா். வாடகை மின்மோட்டாா் பொருத்தப்பட்டு சுரங்கப்பாதையில் இருந்து தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT