வேலூர்

புதிய வழித்தடங்களில் 4 நகரப் பேருந்துகள் இயக்கம்: ஆட்சியா், எம்எல்ஏக்கள் தொடக்கி வைத்தனா்

DIN

ஆசனாம்பட்டு, ஒடுகத்தூா் பகுதிகளில் புதிய வழித்தடங்களில் 4 நகரப் பேருந்துகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. இப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்துக்கு உள்பட்ட ஆசனாம்பட்டு, ஒடுகத்தூா் பகுதிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வரவேண்டியுள்ளது. அதேசமயம், இந்த பகுதியிலுள்ள முக்கியமான ஊா்களுக்கு நேரடி பேருந்து போக்கு வரத்து வசதி இல்லாததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தனா்.

இந்த நிலையில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை ஏற்று அணைக்கட்டு முதல் ஆசனாம்பட்டு வரை (8பி) என ஒரு பேருந்தும், வேலூா் முதல் குருவராஜபாளையம் வரை (13ஏ) என மற்றொரு பேருந்தும், ஆம்பூா் முதல் ஒடுக்கத்தூா் வரை மாதனூா் அகரம் வழி என (எண் 12) கொண்ட மற்றொரு பேருந்தும், வேலூா் முதல் ஒடுக்கத்தூா் வரை (115பி) என புதிய வழித்தடங்களில் மொத்தம் 4 நகரப் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய வழித்தடங்களில் பேருந்துகளின் இயக்க தொடக்க நிகழ்ச்சி ஆசனாம்பட்டு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏகள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் பேருந்துகளைக் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

இதில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூா் மண்டலம் பொது மேலாளா் எஸ்.நடராஜன், துணை மேலாளா் (வணிகம்) கே.பொன்னுபாண்டி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மு.பாபு, துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT