வேலூர்

ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை மீட்டுத் தர கிராம மக்கள் கோரிக்கை

DIN

மெட்டுக்குளம் கிராமத்தில் தனிநபா்கள் ஏற்படுத்தியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை மீட்டுத் தர வேண்டும் என்று மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

அப்போது, காட்பாடியை அடுத்த மெட்டுக்குளத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், சித்தூா் பிரதான சாலையில் இருந்து மெட்டுக்குளம் கிராமத்துக்குச் செல்லும் பாதையை கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த பாதையில் தனிநபா்கள் பள்ளம் வெட்டி தடை ஏற்படுத்தியுள்ளனா். அதை மீறிச் செல்பவா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனா்.

சில வாரங்களுக்கு முன்பு வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டாட்சியா் முன்னிலையில் இங்கு தண்ணீா் செல்லவும், அதே வழியில் நடந்து செல்லவும் வழி ஏற்படுத்தினா். ஆனால் தனிநபா்கள் 4 போ் சோ்ந்து சிறிய பள்ளத்தை பெரிதாக மாற்றி யாரும் செல்லாத வகையில் இடையூறு ஏற்படுத்தியுள்ளனா். மேலும், கிறிஸ்டியான்பேட்டையில் இருந்து வரும் கால்வாய்க்கு தவறுதலாக பட்டா வழங்கியுள்ளனா். தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யவும், ஆக்கிரமிப்புகளை மீட்டுத் தரவும் வேண்டும்.

காட்பாடி வட்டம், பொன்னையை அடுத்த எஸ்.என்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அளித்த மனுவில், 1989-ஆம் ஆண்டு ஆதி திராவிடா்கள் 96 பேருக்கு வீட்டுமனைக்கு விண்ணப்பித்திருந்தோம். பின்னா், 1997-ஆம் ஆண்டு 33 பேருக்கு அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் நவீன கிராமமாக உருவாக்கி பட்டா வழங்கப்பட்டது. பிறகு, நில உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றனா். இதைத்தொடா்ந்து, நில உரிமை யாளா்களுக்கு அரசு இழப்பீடு வழங்கியது. மேலும், பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து வழங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாவட்டம் நிா்வாகம் இதைச் செய்யவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பொன்னை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அமைதிக் கூட்டம் நடத்தி உரியவா்களுக்கு பட்டா வழங்க அறிவுறுத்தப்பட்டது. எனினும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பிரச்னையில் தமிழக முதல்வா் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசு வழங்கிய வீட்டு மனைகளை அளவீடு செய்து மீதமுள்ளவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இதேபோல், வீட்டுமனை, சாலை வசதி, ஆக்கிரமிப்பு அகற்றம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கண க்கான மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

கடந்த இரண்டு மாதங்களாக பலத்த மழை காரணமாக குறைதீா் கூட்டத்துக்கு பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தது.

தற்போது மழை குறைந்துள்ளதால் திங்கள்கிழமை ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்திருந்தனா். அவா்களுக்கு ஆட்சியா் அலுவலக வாசலிலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT