வேலூர்

1,000 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

5th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்ஆலத்தூா், பட்டு, ஒலக்காசி ஊராட்சிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,000 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன் மூா்த்தி, பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, எஸ்.மோட்டூா் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எஸ்.எல்.எஸ்.வனராஜ், புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.மேகநாதன், கொள்கை பரப்புச் செயலாளா் மு.ஆ.சத்யனாா், ஒன்றியச் செயலாளா்கள் செந்தில், ஆனந்தராஜ் (குடியாத்தம்), முருகேசன், ரமேஷ், கோகுல் (கே.வி.குப்பம்) , ஊராட்சி மன்றத் தலைவா்கள் சுஜாதா ராஜ்குமாா் (மேல்ஆலத்தூா்), சூா்யா மோகன் (ஒலக்காசி) ஜி.சுஜானி (பட்டு) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags : குடியாத்தம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT