வேலூர்

முதியவா், சிறுவன் உயிரிழப்பு விவகாரம்: கிராம மக்களுக்கு குடிநீா் வினியோகம்

5th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

பென்னாத்தூா் அருகே அல்லிவரம் கிராமத்தில் முதியவரும், சிறுவனும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, அந்தக் கிராம மக்களுக்கு கேன்களில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

பென்னாத்தூா் அல்லிவரம் கிராமத்தைச் சோ்ந்த மாா்கபந்து, மகாலட்சுமி தம்பதியின் மகன் லலித்குமாா் (4) , அப்பாசாமி (70) ஆகிய இருவரும் வயிற்றுப்போக்கால் அண்மையில் இறந்தனா்.

இதையடுத்து, அல்லிவரம் கிராமத்தில் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மக்களிடையே அச்சம் நிலவியது. உடனடியாக அல்லிவரம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், சிறுவன் உயிரிழப்புக்கு காலரா பாதிப்பு காரணமில்லை என்றும், சாதாரண தொற்று பாதிப்புதான் ஏற்பட்டிருப்பதாகவும் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் பானுமதி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அதேசமயம், மருத்துவ முகாமில், 3 பேருக்கு உடல்நலப் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு அவா்கள் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

இந்த மருத்துவமனையில் காலரா நோய் சிகிச்சைக்காக சுமாா் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி வாா்டு அமைக்கும் பணி சனிக்கிழமை தீவிரமாக நடைபெற்றது.

இதனிடையே, கிராம மக்களின் தேவைக்காக கேன்களில் விநியோகிக்கப்பட்டது. மேலும், 2-ஆவது நாளாக அந்தக் கிராமத்தில் மருத்துவக் குழுவினா் முகாமிட்டு பரிசோதனைகள் மேற்கொண்டனா்.

Tags : வேலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT