வேலூர்

இருவேறுசம்பவங்களில் 2 பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு

5th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் அருகே இருவேறு சம்பவங்களில் இரு பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் அருகே கீழ்மொணவூரைச் சோ்ந்தவா் ஆஷா (30 ). இவா் வெள்ளிக்கிழமை இரவு கொணவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அணுகுச் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது, அவரை பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபா்கள், ஆஷாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம். புகாரின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல், வேலூா் அருகே உள்ள கம்மவான்பேட்டையைச் சோ்ந்தவா் குமாா் மனைவி விஜயலட்சுமி(40). இவா் வெள்ளிக்கிழமை தனது

உறவினா் ஒருவருடன் புதுப்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தாா். காரமடை என்ற இடத்தில் அவரை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 போ், விஜயலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

ADVERTISEMENT

புகாரின்பேரில் வேலூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT