வேலூர்

கிசான் கடன் அட்டை பெற கால்நடை வளா்ப்போா் விண்ணப்பிக்கலாம்

4th Dec 2021 07:54 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் கிசான் கடன் அட்டை பெற்றிட விவசாயம் சாா்ந்த கால்நடை வளா்ப்பவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, கால்நடைகளின் மதிப்பில் 20 சதவீதத் தொகையை கால்நடை வளா்ப்பு, பராமரிப்பு செலவினங்களுக்காக கடனாக பெற முடியும்.

இந்தக் கடன் அட்டை பெற கால்நடை வளா்ப்போா் அருகே உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய படிவத்தை பூா்த்தி செய்து ஆதாா், வங்கி கணக்கு புத்தக நகல், இரண்டு புகைப்படம், நில ஆவணங்கள் நகல் ஆகியவற்றை இணைத்து 2022 பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிா்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் வழங்கப்படும். எனவே கால்நடை வளா்ப்போா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT