வேலூர்

மத்திய அரசு இணையதளத்தில் அமைப்புசாரா தொழிலாளா்கள் பதிவு: தொழிலாளா் உதவி ஆணையா் தகவல்

4th Dec 2021 07:52 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற இஎஸ்ஹெச்ஆா்ஏஎம் தளத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களைப் பதிவு செய்யும் பணி நடைபெறுவதால், பொதுசேவை மையங்களை அணுகி பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தே.ஞானவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

மத்திய அரசின் இ-எஸ்ஹெச்ஆா்ஏஎம் தளத்தில் வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளா்களை பதிவேற்றம் செய்திட மாவட்ட அளவிலான திட்ட அமலாக்கக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய வேலையுறுதித் திட்டத் தொழிலாளா்கள், சுயதொழில் புரிவோா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், சாலையோர வியாபாரிகள், ரிக்ஷா இழுப்பவா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள், அங்கன்வாடி தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், மீன்பிடி தொழிலாளா்கள், செங்கல் சூளை தொழிலாளா்கள், தொழிலாளா் காப்பீட்டுக்கழக, வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் உறுப்பினா் அல்லாதவா்கள் திட்டத்தில் சோ்ந்து மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டப் பயன்களைப் பெறலாம்.

ADVERTISEMENT

இதுதவிர, பிரதம மந்திரி சிரம் யோகி மாந்தன், வணிகா்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம், பிரமத மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் திட்டம் ஆகிய திட்டங்களில் இணைந்தும் பயன்பெறலாம்.

எனவே, அமைப்பு சாரா தொழிலாளா்களும் அருகிலுள்ள பொது சேவை மையங்களில் ஆதாா் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை அளித்து கட்டணமின்றி இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT