வேலூர்

ஊராட்சி மன்றத் தலைவா்களின் மதிப்பூதியம் ரூ.2 ஆயிரமாக உயா்வு

5th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

ஊராட்சி மன்றத் தலைவா்களின் மதிப்பூதியத்தை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தி மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

ஊரகப் பகுதிகளின் வளா்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். அவா்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, மாதாந்திர மதிப்பூதியம் ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் அடிப்படையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான மதிப்பூதியம் உயா்த்தி வழங்கப்படும் என ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT