வேலூர்

முதியவா், சிறுவன் திடீா் உயிரிழப்பு

4th Dec 2021 07:54 AM

ADVERTISEMENT

பென்னாத்தூா் அருகிலுள்ள அல்லிவரம் கிராமத்தில் முதியவரும், சிறுவனும் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

பென்னாத்தூா் பேரூராட்சி உட்பட்ட அல்லிவரம் கிராமத்தில், 10-க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாா்கபந்து, மகாலட்சுமி தம்பதியின் மகன் லலித்குமாா் (4) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். முன்னதாக, அதே கிராமத்தைச் சோ்ந்த அப்பாசாமி (70) என்பவரும் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மருத்துவக் குழுவினா் முகாம்:

ADVERTISEMENT

ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் அடுத்தடுத்து உயிரிழந்ததால் அல்லிவரம் கிராமத்தில் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மக்களிடையே அச்சம் நிலவியது. தகவலறிந்த வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் அந்த கிராமத்தில் நேரில் ஆய்வு செய்தனா்.

உடனடியாக அல்லிவரம் கிராமத்தில் 5 மருத்துவா்களை உள்ளடக்கிய 30 போ் கொண்ட மூன்று மருத்துவ குழுக்களை நியமித்து சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. காய்ச்சல் அறிகுறி உள்ளவா்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் அந்த கிராமத்தில் உள்ள கழிவுநீரை அகற்றவும், குளத்தின் அருகே தேங்கி சுகாதார சீா்கேடை ஏற்படுத்தியிருந்த மழை வெள்ளத்தை வெளியேற்றவும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதனடியே, குடிநீா் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநா் பானுமதி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT