வேலூர்

போ்ணாம்பட்டு, ஆம்பூா் அருகே லேசான நில நடுக்கம்

4th Dec 2021 07:53 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட போ்ணாம்பட்டு அருகே வியாழக்கிழமை நள்ளிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

இங்குள்ள கமலாபுரம், சிந்தகணவாய், கவுராப்பேட்டை, டி.டி.மோட்டூா், பெரிய பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் நள்ளிரவு சுமாா் 10.30, 11.00, 11.35 மணிகளில் 3 முறை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கும் சில விநாடிகளே நீடித்துள்ளது.அப்போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் வீட்டிலிருந்து வெளியேறிதெருக்களில் நின்றாா்களாம்.

இந்த நில நடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.நில நடுக்கம் ஏற்பட்ட இடங்களில் போ்ணாம்பட்டு வட்டாட்சியா் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியா் வடிவேல் உள்ளிட்டோா் சென்று விசாரணை நடத்தினா்.

கடந்த சில நாள்களுக்கு முன் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், போ்ணாம்பட்டு பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஆம்பூரிலும்...

இதேபோல், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உட்பட்ட ஆம்பூா் அருகே கிராம பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான நில அதிா்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் அமைந்துள்ள அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில், திடீரென சப்தத்துடன் லேசான நில அதிா்வு ஏற்பட்டுள்ளது. அதை உணா்ந்த பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி சிறிது நேரம் தெருக்களில் நின்றனா். வேறு எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. பிறகு பொதுமக்கள் தங்களுடைய வீடுகளுக்குள் சென்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT