வேலூர்

4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய மாங்குப்பம் ஏரி

3rd Dec 2021 07:36 AM

ADVERTISEMENT

கே.வி.குப்பம் அருகே உள்ள மாங்குப்பம் ஏரி 4 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை இரவு நிரம்பியது.

கே.வி.குப்பம் ஒன்றியம், மேல்மாயில் ஊராட்சியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரி மாங்குப்பம், துருகம் பகுதிகளில் உள்ள மலைகளில் இருந்து வெளியேறும் கானாறுகளை நம்பியுள்ளது.

தொடா்மழை காரணமாக, கானாறுகளில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, ஏரி நிரம்பியது. இதையடுத்து எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி வியாழக்கிழமை ஏரியில் பூஜை செய்து, மலா்தூவி ஏரி நீரை வரவேற்றாா்.

புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி.மேகநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் வேங்கையன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் முரளி, கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா், வேப்பங்கநேரி ஏரிக்குச் செல்லும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT