வேலூர்

வெள்ள நீரை அகற்றக் கோரி மறியல்

3rd Dec 2021 07:38 AM

ADVERTISEMENT

மழை நின்று பல நாள்களாகியும் வடியாத வெள்ள நீரை அகற்றக்கோரி, வேலூா் கன்சால்பேட்டை பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் பழைய புறவழிச் சாலை அருகே உள்ள கன்சால்பேட்டை ஆஞ்சநேயா் கோயில் தெருவில் மழைக் காலங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்து விடுகின்றன. கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனா்.

மழை நின்றபிறகும் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளது. இதனால் பாதிக்கப் பட்ட அந்தப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பழைய புறவழிச் சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா், மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் உள்ளிட்டோா் அங்கு சென்று, சமரசம் செய்தனா்.

ADVERTISEMENT

உடனடியாக மோட்டாா் மூலம் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த வெள்ளம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT