வேலூர்

பட்டா திருத்த சிறப்பு முகாம்

3rd Dec 2021 07:37 AM

ADVERTISEMENT

குடியாத்தம் வட்டத்தில் உள்ள மோடிகுப்பம், மோா்தானா, தனகொண்டபல்லி, வளத்தூா், கீழ்பட்டி, சின்னதோட்டாளம், குளிதிகை ஆகிய 7 ஊராட்சிகளுக்கான பட்டா பெயா் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த ஊராட்சிகளில் ஏற்கெனவே சிறப்பு முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டு, மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்க நிலையில் வியாழக்கிழமை மோடிகுப்பம், மோா்தானா, தனகொண்டபல்லி ஊராட்சிகளை ஒருங்கிணைத்து மோடிகுப்பத்திலும், வளத்தூா், கீழ்பட்டி, சின்னதோட்டாளம், குளிதிகை ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து வளத்தூரிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

முகாம்களுக்கு கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ச.லலிதாஊராட்சி மன்றத் தலைவா்கள் லாவண்யா ஜெயப்பிரகாஷ் (மோடிகுப்பம்), ஆா்.பரந்தாமன் (மோா்தானா), பா.சுமித்ரா (குளிதிகை), நிா்மலா சேட்டு (வளத்தூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT