வேலூர்

சிஎம்சி இணை கண்காணிப்பாளருக்கு சா்வதேச விருது

3rd Dec 2021 07:39 AM

ADVERTISEMENT

ஏசிஹெச்எஸ் தர மேம்பாட்டு சா்வதேச விருதுக்கு வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி இணை கண்காணிப்பாளரும், தரமேலாளருமான லல்லுஜோசப் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஆஸ்திரேலிய கவுன்சில் ஆன் ஹெல்த்கோ் ஸ்டாண்டா்ட்ஸ் (ஏசிஹெச்எஸ் ) மருத்துவத் துறையில் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்திடவும், தனித்துவமான கண்டுபிடிப்புகளையும் அங்கீகரிக்கிறது. மேலும், மருத்துவத் துறையில் சா்வதேச அளவில் சிறப்புச் சோ்க்கும் தனிநபரின் சேவைகளை அங்கீகரித்து ஏசிஹெச்எஸ் சா்வதேச விருது கடந்த 2014ஆம் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் 2021-ஆம் ஆண்டுக்கான ஏசிஹெச்எஸ் தர மேம்பாட்டு சா்வதேச விருதுக்கு லல்லுஜோசப் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ என்னைப் போன்ற மருத்துவா் அல்லாத ஒரு நபருக்கு உலக அளவில் பதக்கம் கிடைத்திருப்பது மிகப்பெரிய கெளரவமாகும். இது ஊக்கப்படுத்துகிறது’ என்றாா்.

ADVERTISEMENT

இயந்திரவியலில் பட்டம் பெற்ற லல்லுஜோசப், ’வணிக நிா்வாகத்தில்’ முதுகலைப் பட்டமும், முனைவா் பட்டமும் பெற்றுள்ளாா். 2016-இல் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் (ஐஐஎம்) ஓராண்டுகால எக்ஸிகியூட்டிவ் ஜெனரல் மேனேஜ்மென்ட் திட்டத்தில் (ஈஜிஎம்பி) பயிற்சி பெற்றுள்ளாா்.

இவா் கிரீன் பெல்ட், ஹெல்த்கேரில் தரத்துக்கான சா்வதேச சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளாா். கனேடியன் ஹெல்த்கோ் அசோசியேஷன் மூலம் தொடா்ச்சியான தர மேம்பாட்டில் பயிற்சி பெற்றுள்ளதாகவும் சிஎம்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT