வேலூர்

காவலரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் மோசடி

3rd Dec 2021 07:38 AM

ADVERTISEMENT

ஆன்லைனில் காவலா் அளித்த விவரங்களை பயன்படுத்தி அவரது வங்கிக்கணக்கில் ரூ.80 ஆயிரம் கடன் பெற்று, அதில் ரூ.50 ஆயிரத்தை உடனடியாக வேறு வங்கிக்கணக்கு மாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவா் பிரபு(33). இவா் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள காவலா் குடியிருப்பில் வசிக்கிறாா். இவரது ஒரு வங்கிக் கணக்கில் பணம் எதுவும் வைக்காமல், நீண்ட நாள்களாகப் பயன்படுத்தாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில், பிரபுவின் கைப்பேசிக்கு வந்த குறுந்தகவலில், வங்கிக் கணக்கை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும் என்று கூறி ஆன்லைனில் புதுப்புக்குமாறும் லிங்க் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில் பிரபு பதிவு செய்த விவரங்களைப் பயன்படுத்தி, மோசடி நபா்கள், பிரபுவின் வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் கடன் பெற்று அடுத்த + சில நிமிடங்களில் அதில் ரூ.50 ஆயிரத்தை வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றினராம்.

ADVERTISEMENT

புகாரின்பேரில் வேலூா் மாவட்ட சைபா் கிரைம் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT