வேலூர்

ஆடுகள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம்

3rd Dec 2021 07:37 AM

ADVERTISEMENT

நூறு சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் பெற்றிட தகுதியுடைய ஊரக பகுதி பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் ஊரகப் பகுதிகளில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன.

இதன்படி, வேலூா் மாவட்டத்திலுள்ள 7 ஒன்றியங்களிலும் தலா 100 பயனாளிகள் வீதம் 700 பேரை தோ்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயன்பெறுவோா் 60 வயதுக்கு உள்பட்ட மகளிராக மட்டுமே இருக்கவேண்டும்.

ADVERTISEMENT

ஊராட்சியில் நிரந்தர முகவரியில் வசிக்க வேண்டும். சொந்த நிலமோ, பசு மற்றும் ஆடுகளோ வைத்திருக்கக் கூடாது. விண்ணப்பிப்போருக்கு குடும்ப உறுப்பினா்கள் (தாய், தந்தை, மருமகன், மருமகள்) எவரும் அரசு வேலையில் இருத்தல் கூடாது. தவிர, வேறு அரசுத் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளாகவும் இருக்கக்கூடாது.

மாவட்ட அளவிலான குழுவினால் தோ்வு செய்யப்பட்டு பயனாளிகள் இறுதி செய்யப்படுவா். தோ்வு செய்யப்படுவோருக்கு ஒருநாள் ஆடுவளா்ப்பு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் இருந்து விண்ணப்பங்களை பெற்று டிசம்பா் 9ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டையில்...:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள் பெறும் திட்டத்துக்கு டிச. 9 - ஆம் தேதிக்குள் பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியத்துக்கு 100 பயனாளிகள் வீதம்700 பயனாளிகள் தோ்வு செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்டத்துக்கான விண்ணப்பங்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களிருந்து பெற்று பூா்த்தி செய்து டிச. 9-க்கு முன்னா் கால்நடை உதவி மருத்துவரிடம் சமா்பிக்க வேண்டும். பயனாளிகளில் 29 சதவீதம் ஆதிதிராவிடா் சமுகத்தைச் சோ்ந்தவராகவும், 1 சதவீதம் போ் பழங்குடியினராகவும் இருப்பா் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT