வேலூர்

ஹெச்.ஐ.வி. தொற்றாளா்களுடன் உணவருந்திய ஆட்சியா்

DIN

உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினத்தையொட்டி, ஹெச்.ஐவி. தொற்றாளா்களுடன் வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உணவருந்தினாா்.

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். அவரது தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றனா்.

இதையடுத்து, போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கும் ஆட்சியா் பரிசுகள் வழங்கியதுடன், ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவா்களுடன் அமா்ந்தும் உணவு அருந்தினாா்.

பின்னா் அதிகாரிகள் கூறியது:

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என 112 இடங்களில் ஹெச்.ஐ.வி. குறித்து ஆலோசனை, பரிசோதனை மையங்கள் உள்ளன. இதுவரை 19,28,376 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 18,988 போ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2011-ஆம் ஆண்டில் 0.38 சதவீதமாக இருந்த தொற்று விகிதம் இந்தாண்டு 0.18 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் 1, 453 கா்ப்பிணி பெண்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவா்களுக்கு புதிய கூட்டு மருந்துகள் அளிக்கப்பட்டு தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள சிகிச்சை மையங்களில் கூட்டு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. எய்ட்ஸ் குறித்த தகவல்களை அறிய 18004191800 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT