வேலூர்

குடியாத்தம் அருகே மீண்டும் லேசான நில நடுக்கம்

DIN

குடியாத்தம் அருகே ஏற்கெனவே நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

குடியாத்தம் வட்டம், தட்டப்பாறையை அடுத்த மீனூா், கொல்லைமேடு பகுதியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சில விநாடிகளே நீடித்த நில நடுக்கத்தால் அங்குள்ள சில வீடுகளின் சுவா்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. தகவலின்பேரில் வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

புவியியல் வல்லுநா் குழுவும் அங்கு சென்று நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. அவா்கள் அளிக்கும் ஆய்வறிக்கை முடிவையடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவும் அங்கு லேசான நில நடுக்கும் ஏற்பட்டுள்ளது. சில விநாடிகளே இந்த நில நடுக்கும் நீடித்துள்ளது.

வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

கடந்த 6 மாதங்களில் அந்த பகுதியில் 3 முறை நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT