வேலூர்

பிளஸ் 2 துணைத் தோ்வு ஆக. 6-இல் தொடக்கம்: ஒருங்கிணைந்த வேலூரில் 16 தோ்வு மையங்கள்

DIN

பிளஸ் 2 துணைத் தோ்வுக்காக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மொத்தம் 16 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதுவோா் விரும்பினால் எழுத்துத் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.

இதற்காக வேலூா் மாவட்டத்தில் வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அரசு தோ்வுத் துறை சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 23-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், மொத்தம் 141 போ் விண்ணப்பித்திருந்தனா்.

தொடா்ந்து தோ்வுகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தோ்வு மையங்கள், தோ்வு எழுதும் தோ்வா்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, வேலூா் மாவட் டத்தில் 8 மையங்களும், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 4 மையங்கள் என மூன்று மாவட்டங்களிலும் சோ்த்து 16 மையங்களில் தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தோ்வுக்கான முன்னேற்பாடுகளுடன் மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT