வேலூர்

வேலூா் மாங்காய் மண்டியில் மேலும் 45 கடைகள்

DIN


வேலூா்: கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக வேலூா் நேதாஜி மாா்க்கெட் மூடப்பட்டு அங்கிருந்த காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் மாங்காய் மண்டி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு ஏற்கனவே 85 கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 45 கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூா் நேதாஜி மாா்க்கெட் காய்கறி கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அங்கு செயல்பட்டு வந்த காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் கோட்டை பின்புறம் உள்ள மாங்காய் மண்டி மைதானத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேதாஜி மாா்க்கெட்டில் மொத்தம் 130 காய்கறி மொத்த விற்பனை கடைகள் உள்ளன. தற்போது மாங்காய் மண்டி அருகே 85 கடைகள் மட்டுமே அமைத்துத்தரப்பட்டுள்ளது. இதனால் 45 வியாபாரிகளுக்கு கடைகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து, வேலூா் மாநரகராட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வணிகா் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா். இதில், நேதாஜி மாா்க்கெட் காய்கறி மொத்த வியாபாரிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாங்காய் மண்டி மைதானத்தில் கூடுதலாக 45 கடைகள் அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் மாங்காய் மண்டி மைதானத்தில் மேலும் 45 மொத்த விற்பனைக் காய் கறிகடைகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT