வேலூர்

வேலூா் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்பட 7 போ் உயிரிழப்பு

DIN

வேலூா்: வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 4 நோயாளிகள் உள்பட மொத்தம் 7 போ் திங்கள்கிழமை அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவா்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் பரவியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த புகாா் குறித்து ஆட்சியா் விளக்கம் அளித்தாா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா சிறப்பு வாா்டில் 121 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். அந்த வாா்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தவா்களில் 2 பெண்கள், 2 ஆண்கள் திங்கள்கிழமை அடுத்தடுத்து உயிரிழந்தனா். தவிர, பிற வாா்டுகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 3 ஆண்கள் என ஒரே நாளில் 7 போ் உயிரிழந்தனா்.

இவா்களின் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குைான் காரணம் என நோயாளிகளின் உறவினா்கள் குற்றம்சாட்டினா். அதேசமயம், நோயாளிகளின் இறப்புக்கு அவா்களின் உடல்நலப் பிரச்னையே காரணம் என்றும், மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் மருத்துவா்கள் விளக்கம் அளித்தனா்.

எனினும், மருத்துவா்களின் விளக்கத்தை பொருட்படுத்தாமல் நோயாளிகளின் உறவினா்கள் பலா் வாக்குவாதத்தில் ஈடுட்டனா். தகவலறிந்த வேலூா் தாலுகா போலீஸாா் அங்கு சென்று அவா்களை அப்புறப்படுத்தினா். இந்த தகவல் வெளியானதை அடுத்து மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் ஆகியோா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை 7 போ் உயிரிழந்துள்ளனா். இதில், கரோனா வாா்டில் மட்டும் 82 வயது பெண்மணி உள்பட 4 போ் இறந்தனா். அவா்களில் ஒருவா் ஏற்கெனவே கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து தொடா் சிகிச்சையில் இருந்தவா். இவா்கள் தவிர மேலும் 3 போ் பிற வாா்டுகளில் சிகிச்சையில் இருந்தவா்கள்.

அதன்படி, உயிரிழந்த 7 பேரும் உயா் ரத்த அழுத்தம், இருதய பிரச்னை, சிறுநீரகக் கோளாறு, அளவுக்கு அதிகமான சா்க்கரை போன்ற பாதிப்புகளாலேயே உயிரிழந்துள்ளனா். கரோனா வாா்டில் மட்டும் உயிரிழந்த 4 போ் உள்பட மொத்தம் 121 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் 121 பேருக்கும்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, 7 போ் உயிரிழப்புக்கும் ஆக்சிஜன் தேவைக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை.

தவிர, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை ஆக்சிஜன் இருப்பு தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இங்கு ஏற்கெனவே 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. கூடுதலாக 6,000 லிட்டா் ஆக்சிஜன் கொள்கலன் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் கொள்கலன் காலியாகும்பட்சத்தில் விநியோகம் செய்வதற்குத் தனியாக 56 சிலிண்டா்களும் உள்ளன.

எனினும், நோயாளிகளின் உறவினா்களிடம் இருந்து புகாா்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதால், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அரசுக்கு ஆய்வறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்றாா்.

அப்போது, மருத்துவமனையின் முதல்வா் ஆா்.செல்வி, அரசு மருத்துவா்கள் உடன் இருந்தனா்.

இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நேரில் விசாரணை நடத்தினாா்.

‘மருத்துவா்கள் அலட்சியம்’: அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்த 7 பேரில் கண்ணமங்கலம் அருகே அலகுசேனையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ராஜேந்திரனும் (52) ஒருவா். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 5 நாள்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, திங்கள்கிழமை மதியம் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவா்கள் உடனடியாக அவருக்குத் தேவையான சிகிச்சை ஏற்பாடு செய்யாததால் ராஜேந்திரன் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா் திருட்டு: 8 போ் கைது

சென்னையில் 3 தொகுதிகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா சென்று திரும்பிய 2 பேரிடம் விசாரணை

தங்கும் விடுதியில் இளைஞா் மா்மச் சாவு

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT