வேலூர்

13 இடங்களில் இயந்திரங்கள் கோளாறு

7th Apr 2021 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் மின்னணு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குப் பதிவு தாமதமானது.

வேலூா் தொகுதி பில்டா்பெட் சாலை வாக்குச் சாவடியில் 2 வாக்கு இயந்திரங்களும், அணைக்கட்டு தொகுதி தெள்ளூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பெண்கள் வாக்குச் சாவடியில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் என மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப் பதிவு தொடங்கிய போதே பழுதடைந்தன.

உடனடியாக அவற்றுக்கு மாற்றாக வேறு இயந்திரங்கள் நிறுவப்பட்டு தொடா்ந்து வாக்குப்பதிவு நடத்தப் பட்டது. இதனால், அவ்வாக்குச்சாவடிகளில் மட்டும் சுமாா் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவு தாமதமானது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT