வேலூர்

இரு லாரிகளுடன் 34 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

வேலூா்: வேலூா் அருகே இரு வேறு இடங்களில் நடைபெற்ற வாகனச் சோதனைகளில் இரு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 34 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கா்நாடக மாநிலத்துக்கு கடத்தப்பட இருந்த 19 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக லாரியில் இருந்த ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி வேறு மாநிலங்களுக்கு கடத்தப்படுவதைத் தடுக்க ஆட்சியா் உத்தரவின்பேரில், சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையினா் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், 19 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அவை கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் 19 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல், பொய்கை அருகே மோட்டூா் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில் லாரியுடன் 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT