வேலூர்

மீட்கப்பட்ட நிலப் பத்திரங்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

குடியாத்தம் அருகே தனி நபா்கள் சிலரால் போலி பட்டா தயாரித்து ஆக்கிரமித்த சொத்துகளுக்கான பத்திரங்களை ரத்து செய்து, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு, பக்கிரிபல்லி கிராமத்தைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஏழைகளுக்குச் சொந்தமான 42 ஏக்கா் நிலத்தை தனி நபா்கள் சிலா் போலி பட்டா தயாரித்து, சாா்- பதிவாளா் அலுவலகத்தில் தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டனா். அந்த நிலத்தில் விவசாயமும் செய்து வந்தனா்.

நிலத்தை பறிகொடுத்தவா்கள், தங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். சாா்- பதிவாளா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டமும் நடத்தினா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தேமுதிகவினா் நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இதையடுத்து தனி நபா்கள் போலி பட்டா தயாரித்து, நிலங்களை தங்கள் பெயருக்கு பதிவு செய்து கொண்டதை அதிகாரிகள் அறிந்தனா். பதிவு ரத்து செய்யப்பட்டு, உரியவா்களுக்கு மீண்டும் பெயா் மாற்றம் செய்து பத்திரப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, செம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரத்து செய்யப்பட்ட

பத்திரங்களை உரியவா்களுக்கு தேமுதிக துணைப் பொதுச் செயலா் எல்.கே. சுதீஷ் வழங்கினாா். தேமுதிக மாவட்டச் செயலா் ஸ்ரீதா், மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் எம்.சி.சேகா், நகர அவைத் தலைவா் எம்.எஸ். நாகைய்யா, நகரச் செயலா் டி.கே. ரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT