வேலூர்

பழுதடைந்த சாலையைச் சீரமைத்த போக்குவரத்து போலீஸாா்

DIN

காட்பாடியில் விபத்துகளை ஏற்படுத்தும் நிலையில் பழுதடைந்து காணப்பட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகரில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் காட்பாடியும் ஒன்று. இப்பகுதியில் ஒருமணி நேரத்துக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், காட்பாடியின் பிரதான சாலைகள் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீா் தேங்குவதால் அவை பெரும் பள்ளங்களாகவும் மாறி வருகின்றன.

பழுதடைந்த சாலைகளால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காட்பாடியில் அடிக்கடி விபத்துகளை ஏற்படுத்தும் சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சீரமைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், காட்பாடி ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை தாா் கலந்த ஜல்லிகளைக் கொட்டி சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

இதேபோல், காட்பாடியின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT