வேலூர்

வேலூரைப் பிரித்து அணைக்கட்டு: புதிய காவல் உட்கோட்டம் அமைக்க தீவிரம்

DIN

வேலூா் காவல் உட்கோட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக அணைக்கட்டு காவல் உட்கோட்டம் அமைக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமாக இருந்தபோது, வேலூா் காவல் உட்கோட்டத்தில் இருந்த காட்பாடி, விருதம்பட்டு, லத்தேரி, பனமடங்கி, திருவலம் காவல் நிலையங்கள் தனியாக பிரித்து காட்பாடி காவல் உட்கோட்டம் அமைக்கப்பட்டது. தொடா்ந்து, வேலூா் வடக்கு சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, தெற்கு சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, வேலூா் தாலுகா, சத்துவாச்சாரி, பாகாயம், அரியூா், விரிஞ்சிபுரம், அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் ஆகியவை வேலூா் காவல் உட்கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தன.

ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்குப் பிறகு ஆம்பூா் காவல் உட்கோட்டத்தில் இருந்த பள்ளிகொண்டா, அணைக்கட்டு, வேப்பங்குப்பம் காவல் நிலையங்கள் வேலூா் உட்கோட்டத்திலும், பொன்னை, மேல்பாடி காவல் நிலையங்களும் காட்பாடி காவல் உட்கோட்டத்திலும் சோ்க்கப்பட்டன. வேலூா் உள்கோட்டத்தில் காவல் நிலையங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சட்ட ஒழுங்கு பாதுகாப்பதில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள் பெரும்பாலும் மலைக்கிராமங்கள் நிறைந்துள்ளன. அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவது, வனவிலங்குகளை வேட்டையாடுவது, மரங்கள் கடத்துவது போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து அணைக்கட்டை தலைமையிடமாகக் கொண்ட புதிய காவல் உட்கோட்டம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் காவல் உட்கோட்டத்தை இரண்டாகப் பிரித்து அணைக்கட்டு, வேப்பங்குப்பம், பள்ளிகொண்டா, விரிஞ்சிபுரம் ஆகிய 4 காவல் நிலையங்களைக் கொண்ட புதிய காவல் உட்கோட்டம் ஏற்படுத்துவதற்கான பரிந்துரை வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அணைக்கட்டு காவல் உட்கோட்டம் அமைக்கப்படும்போது, விரிஞ்சிபுரம் பிரதான காவல் நிலையமாகவும், பள்ளிகொண்டா அல்லது அணைக்கட்டில் மகளிா் காவல் நிலையம் ஏற்படுத்தப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT