வேலூர்

புரட்டாசி சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த ஆண்டு புரட்டாசி மாதம் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இம்மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. வேலூரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தா்கள் நீண்டவரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனா்.

இதேபோல், வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்று பூஜை செய்யப்பட்டது. வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் உள்ள சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

தவிர, அரசமரப்பேட்டை லஷ்மி நாராயண பெருமாள் கோயில், கலாஸ்பாளையத்தில் உள்ள கோதண்டராமா் கோயில், காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துா்கை வெங்கடாசலபதி கோயில், காட்பாடி கோபாலபுரத்தில் உள்ள நாராயணமூா்த்தி கோயில், பிரம்மபுரம் மலை வெங்கடாசலபதி கோயில், பஜாரில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில், சஞ்சீவராயபுரம் பிரசன்ன வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயில் என வேலூா் மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இவற்றில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT