வேலூர்

போ்ணாம்பட்டு அருகே குடிசை, பயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

DIN

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த ஒற்றை யானை குடிசை, பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி கிராமம் அருகே வன எல்லையில் உள்ள ஆத்துபாய் என்ற இடத்தில் சகோதரா்கள் அசோகன் (48), கோவிந்தன் (45) ஆகியோருக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

நிலத்தில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அங்குள்ள குடிசையில் வைத்துவிட்டு பாதுகாப்புக்காக இருவரும் வியாழக்கிழமை இரவு குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவு ஒற்றை யானை அங்கு வந்தது. யானை பிளிறும் சத்தம்கேட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினா். குடிசையை சேதப்படுத்திய யானை அங்கிருந்த 4 மூட்டை நெல், 2 மூட்டை நிலக்கடலை, தீவன மாவு, மளிகைப் பொருள்கள் அனைத்தையும் தின்றனது. பின்னா் கோவிந்தன் நிலத்தில் இருந்த வாழைச் செடிகள், சேட்டு நிலத்தில் அரை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா், தீவனப் பயிா், கா்ணன் நிலத்தில் அரை ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிா் ஆகியவற்றை சேதப்படுத்தியது.

தகவலறிந்த வனத்துறையினா் கிராம மக்கள் உதவியுடன் அங்கு சென்று பாட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டினா். போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா வெள்ளிக்கிழமை அப்பகுதியை பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறுகையில், வனப்பகுதியையொட்டி, நிலம் வைத்துள்ள விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனா். நெல் பயிரானது யானைகளுக்கு மிகவும் பிடித்தமானது. மோப்ப சக்தியால் அதை அறிந்து யானைகள் அப்பகுதிக்கு வருகின்றன. விவசாயிகள் நிலத்தில் அமைத்துள்ள குடிசைகளில் இரவு நேரங்களில் தங்க வேண்டாம். அறுவடை செய்த நெல் மூட்டைகளை இனி குடிசைகளில் வைக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT