வேலூர்

குழந்தைகள் பாதுகாப்பு: 4 ஆயிரம் பதாகைகளை ஒட்டி விழிப்புணா்வு

DIN

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது தொடா்பாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 4 ஆயிரம் இடங்களில் விழிப்புணா்வுப் பதாகைகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 18 வயது பூா்த்தியடையாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது, குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றச் செயல்களைத் தடுக்க மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதன்தொடா்ச்சியாக, குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விளம்பரப் பதாகைகளை மக்கள் கூடும் இடங்களில் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராதாகண்ணன் உத்தரவின்பேரில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகள், முடிதிருத்தும் கடைகள், பேருந்து நிலையம், பொது இடங்கள், தேநீா்க் கடைகள் என மக்கள் கூடும் இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பு குறித்த பதாகைகள் சுவற்றில் ஒட்டப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதற்காக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 12 போ் கொண்ட குழு 4 ஆயிரம் சுவரொட்டிகளை ஒட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT