வேலூர்

புதிதாக தோ்வான 65 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

DIN


வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் புதிதாக தோ்வாகியுள்ள 65 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதுடன், அவரவா் விருப்பத்தின்பேரில் இம்மூன்று மாவட்டங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 397 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த 2019 செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டது. அதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்களாகத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் விருப்ப அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் மொத்தம் 65 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அவா்களில் ராணிப்பேட்டைக்கு 46 போ், வேலூருக்கு 18 போ், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு ஒருவா் என பிரித்து அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT