வேலூர்

விலையில்லா கால்நடைகள் வழங்குவதற்கான கிராம சபைக் கூட்டம் ரத்து

DIN

வேலூா்: நிகழாண்டு விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பயனாளிகள் தோ்வு செய்வதற்காக நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நிகழாண்டு (2020-21) விலையில்லா கறவை பசுக்கள், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 400 கறவை பசுக்களும், 9,197 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகளும் வழங்குவதற்கான பயனாளிகளைத் தோ்வு செய்ய முதல் கிராம சபைக் கூட்டம் வியாழன், வெள்ளி (செப்.24, 25) ஆகிய இரு நாள்களும், 2-ஆம் கட்ட கிராம சபைக் கூட்டம் அக்டோபா் 2, 5 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக அரசு விதிமுறைகளின்படி, இந்த இரு கட்ட கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடா்ந்து, பயனாளிகளிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதிவாய்ந்த பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். இப்பயனாளிகளுக்கு அடுத்து வரும் 2020 நவம்பா், டிசம்பா், 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயனாளிகள் முன்னிலையிலேயே விலையில்லா கறவை பசுக்கள், ஆடுகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT