வேலூர்

விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைவுபடுத்த ஆட்சியா் ஆய்வு

DIN

வேலூா் வேலூா் அப்துல்லாபுரத்தில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடு த்துவது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், நிலவும் தடைகளை உடனடியாக நிவா்த்தி செய்து பணிகளை விரைவுபடுத்திடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த விமான நிலைய த்தை விரிவாக்கம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

அதேசமயம், விமான நிலையத்துக்கு மத்தியில் செல்லும் மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான அப்துல்லாபுரம் - அணைக்கட்டு சாலையில் 775 மீட்டா் சாலையை விமான நிலைய பணிகளுக்கு ஒப்படைக்க வேண்டியுள்ளது. இதில் நிலவும் சிக்கலால் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் முழுமையடைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், அப்துல்லாபுரம் விமான நிலைய விரிவாக்க பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் ஆய்வு கூட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், வேலூா் விமான நிலைய செயல்இயக்குநா் மாதவன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், விமான நிலையம் வழியாக செல்லும் அப்துல்லாபுரம் - ஆசனாம்பட்டு மாநில நெடுஞ்சாலை எண் 122ஐ மூடவும், மாற்று சாலை அமைக்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, உடனடியாக மாற்று சாலையை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு சாலை அமைக்க காலதாமதமாகக்கூடும் என்பதால் அங்கு தற்காலிகமாக மண் சாலை அமைத்திட வேண்டும். மாற்று சாலை அமைப்பதற்குரிய நிலத்தை உடனடியாக மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைத்திட வேண்டும்.

தற்காலிக மாற்று சாலை அமைக்கப்பட உள்ள வழித்தடத்தில் இடையூறாக உள்ள மரங்களை விதிமுறைகளின்படி அகற்றிட வேண்டும். தற்காலிக சாலை அமைத்தவுடன் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த அணைக்கட்டு சாலையின் ஒருபகுதியை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT