வேலூர்

மருந்துக்கழிவுகளை கொட்டக்கூடாது - ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

DIN

வேலூா்: கால்நடைகளை பாதிக்கும் மருந்துக்கழிவுகளை கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேட்டுஇடையாம்பட்டி கிராம மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் வீணாகும் மருந்துக் கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு அருகே உள்ள மேட்டு இடையாம்பட்டி கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். அவா்கள் அங்குள்ள அதிகாரியிடம் மருந்து கழிவுகளை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது -மேட்டுஇடையாம்பட்டி கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறோம். 300 பசு மாடுகளும், 700 ஆடுகள் வளா்க்கப்படுகின்றன.

தற்போது மேட்டுஇடையாம்பட்டி கிராமத்தையொட்டியுள்ள நிலத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக வருவாய்துறையினா் ஆய்வு செய்துள்ளனா். இதுதொடா்பாக கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. தற்போது கரோனா தொற்று பரவிவரும் சமயத்தில் இதுபோன்று மருந்துக்கழிவுகளை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

விவசாயமும், கால்நடை மேய்ச்சல் நிலங்களும் பாழாகும் வாய்ப்பும் நிலவுகிறது. எனவே மேட்டுஇடையாம்பட்டி கிராமத்தையொட்டி மருத்துவக்கழிவு கொட்டுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள்,

இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.--படம் உண்டு...வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மேட்டுஇடையாம்பட்டி கிராம மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT