வேலூர்

நடைபயிற்சி செய்ய வேலூா் கோட்டை வளாகத்துக்குள் அனுமதி மறுப்பு: பொதுமக்கள் வாக்குவாதம்

DIN

வேலூா்: வேலூா் கோட்டை வளாகத்துக்குள் நடைபயிற்சி செய்யவும், விளையாட்டுகளில் ஈடுபடவும் அனுமதிக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், பொது முடக்க உத்தரவு அமலில் உள்ளதால் நடைபயிற்சிக்கு அனுமதிக்க இயலாது என போலீஸாா் கூறியதை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

வேலூா் கோட்டை வளாகத்துக்குள் உள்ள மைதானத்தில் தினமும் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கானோா் நடைபயிற்சி செல்வது வழக்கம். இதுதவிர வாலிபால், இறகுப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளிலும் ஈடுபடுவா். சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவா்கள் பெருமளவில் கோட்டைக்கு வந்து நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனா்.

கரோனா தொற்று முன்னெசரிக்கை நடவடிக்கையாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் வேலூா் கோட்டை மூடப்பட்டது. கோட்டை சுற்றுச்சுவா் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டதுடன், கோட்டை முன்பு இரும்பு கம்பிகளால் போலீஸாா் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், காவலா் பயிற்சி பள்ளியில் பணிபுரியும் அதிகாரிகள், கோயில் ஊழியா்கள் மட்டுமே கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா். இதனால் சுற்றுலா பயணிகளின்றி கோட்டை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் வேலூா் கோட்டை வளாகத்திலுள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். எனினும், கோட்டை வளாகத்துக்குள்ள அருங்காட்சியகம், பழங்கால கட்டடங்கள் உள்ளிட்டவற்றை பாா்வையிடவும் தொடா்ந்து தடை நிலவுகிறது. இதேபோல், காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சிகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்படுவதில்லை.

கோட்டை வளாகத்துக்குள் உள்ள மைதானத்தில் நடை பயிற்சி, விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி 60-க்கும் மேற்பட்ட மக்கள் புதன்கிழமை கோட்டை முன்பு உள்ள காந்தி சிலை அருகே திரண்டதுடன், தொல்லியல் துறை ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பொது முடக்க தடை உத்தரவு தொடா்ந்து அமலில் உள்ளதால், கோட்டை வளாகத்துக்குள் உடற்பயிற்சியில் ஈடுபட இன்னும் அனுமதி வழங்கவில்லை. அரசு அனுமதி வழங்கியதும் வழக்கம்போல் கோட்டை திறக்கப்படும் எனக் கூறினா். இதையடுத்து, உடற்பயிற்சி செய்ய வந்தவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

SCROLL FOR NEXT