வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கரோனா

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை வரை 13,829 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,947-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 12,640 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இம்மாவட்டத்தில் இதுவரை 210 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,559-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11, 886 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 518 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 155 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 65 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 4,440 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,505-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,792 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 630 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 83 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT