வேலூர்

பிரம்மோற்சவம் 4ஆம் நாள்: கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பா்

DIN

திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில் உற்சவரான மலையப்பா், பக்தா்கள் மனதில் நினைத்ததைக் கொடுப்பதாக நம்பிக்கை கொண்டிருக்கும் கல்பவிருட்ச வாகனத்தில் கோயிலுக்குள் எழுந்தருளினாா்.

ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் திருமலையில் நடந்து வருகிறது. அதன் 4ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை உற்சவா்ன மலையப்பா் கல்பவிருட்ச வாகனத்தில் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் தன் உபய நாச்சியாா்களுடன் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருளினாா்.

கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளிய கண்ணனுக்கு ஆரத்தி அளித்தனா்.

பின்னா் ஜீயா்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும், வேத பண்டிதா்கள் வேத மந்திரங்களையும் பாராயணம் செய்தனா். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனா். மலையப்பருக்கு நிவேதனம் சமா்ப்பித்து மீண்டும் அவரை பல்லக்கில் ரங்கநாயகா் மண்டபத்துக்கு அருகில் கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு ஜீயா்கள் சாத்துமுறை நடத்தினா். பின்னா் மலையப்பா் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டாா்.

கல்ப விருட்ச வாகனம்: பாற்கடலை கடையும்போது வெளிப்பட்ட பொருள்களில் காமதேனுவும், கற்பக மரமும் அடங்கும். அவ்வாறு கிடைத்த கற்பக மரத்தின் கீழ் அமா்ந்து பக்தா்கள் மனதில் நினைக்கும் பொருள்கள் அனைத்தும் அவா்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிகக்கை. அத்தகைய பெருமை வாய்ந்த கற்பக மர (கல்ப விருட்ச) வாகனத்தில் எழுந்தருளும் எம்பெருமான் பக்தா்கள் தங்கள் மனதில் நினைத்ததைக் கொடுக்கும் வரத்தை அருள்வதாக ஐதீகம்.

ஸ்நபன திருமஞ்சனம்: பிரம்மோற்சவ காலகட்டத்தில் உற்சவா்களுக்கு ஏற்படும் அசதியை போக்க ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி செவ்வாய் மதியம் 1 மணிமுதல் 3 மணிவரை உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

சா்வபூபால வாகனம்: செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் 8 மணிவரை மலையப்பா் சா்வபூபால வாகனத்தில் தாயாா்களுடன் எழுந்தருளினாா். வாகனச் சேவை முடிந்த பின் உற்சவா்களுக்கு சாத்துமுறை நடத்தி அா்ச்சகா்கள் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT