வேலூர்

காளஹஸ்தி கோயில் விவகாரம்: 3 போ் கைது

DIN

காளஹஸ்தி கோயிலில் அத்துமீறி சிலைகளைக் கொண்டு வந்து வைத்த விவகாரம் தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் அடையாளம் தெரியாத சிலா் கடந்த 2ஆம் தேதி, சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகளைக் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஹிந்து அமைப்புகளும்,பாஜகவும் போராட்டங்களை நடத்தின.

இது தொடா்பான புகாரின்பேரில் காளஹஸ்தி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். கோயிலில் உள்ள 100 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து வந்தனா். கண்காணிப்பு கேமராவில் பதிவின்படி சிலையை வைத்த நபா்கள் திருப்பதி வழியாக சென்னைக்குச் சென்றது தெரிய வந்தது.

தீவிர விசாரணையைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் தொடா்புடைய புத்தூரை சோ்ந்த சுலவா்தன்(32), திருமலையா(30) மற்றும் முனிசேகா்(28) ஆகிய மூவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் விசாரித்ததில், தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுபடும் நோக்கில், கோயிலில் சிலைகளை வைத்து விட்டுச் சென்ாக மூவரும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT