வேலூர்

வேளாண் சட்ட மசோதா விவசாயிகளுக்கு பலனளிக்காது: விவசாயிகள் சங்க இளைஞரணி தலைவா்

DIN

வேலூா்: ‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதா விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் அளிக்கக்கூடியது அல்ல’ என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவா் சுபாஷ் தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து இச்சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. பின்னா், சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவா் சுபாஷ் செய்தியாளா்களிடம் கூறியது:

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களை இயற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை அளிக்காது. இதன்மூலம் விவசாயிகள் கொத்தடிமைகளாக வாழும் சூழ்நிலைதான் ஏற்படும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாய உற்பத்திப் பொருள்களை போதுமான விலைக்கு விற்பனை செய்ய இயலாது. இந்த சட்டங்களால் விவசாயிகள் நாடு முழுவதும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய முடியும் என மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

ஆனால் ஏற்கெனவே வெங்காயம், பழங்கள் போன்றவற்றை விவசாயிகள் நாடு முழுவதும் விற்பனை செய்து வருகின்றனா். சிறு, குறு விவசாயிகள் இதுபோன்ற விற்பனையில் ஈடுபட முடியாது. தற்போது கொண்டுவரப்பட்ட சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமானவை அல்ல.

விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் வகையில் இந்த சட்டம் அமைந்துள்ளது. இது விவசாயிகளுக்கு ஒருபோதும் பயனளிக்காது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு நீங்கியதும் வேளாண் சடத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

அப்போது, சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT