வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை 13,614 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை புதிதாக 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,746-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 12,403 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா். கரோனாவுக்கு 205 போ் உயிரிழந்தனா்.

திருப்பத்தூரில் 108 பேருக்கு பாதிப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 108 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,383-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 3,664 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்டனா்.

638 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்புக்கு இதுவரை 81 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டையில் 61 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 61பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,404-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 11, 759 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.மேலும் 490 போ் வாலாஜா, வேலூா் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கிசிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்புக்கு இதுவரை 155 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT