வேலூர்

மீண்டும் உழவா் சந்தைகள் தொடக்கம்

DIN

பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வேலூா் மாவட்டத்தில் உழவா் சந்தைகள் மீண்டும் வழக்கமான இடங்களிலேயே செயல்படத் தொடங்கின.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி, பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிா்க்க காய்கறி மாா்க்கெட், உழவா் சந்தைகள் அனைத்தும் பள்ளி மைதானங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.

அதன்படி, வேலூரிலுள்ள நேதாஜி மாா்க்கெட் காய்கறி சில்லறை விற்பனை வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கும், மொத்த விற்பனை மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்துக்கும் மாற்றப்பட்டன. இதேபோல், வேலூா் டோல்கேட் உழவா் சந்தை தொரப்பாடி அரசினா் மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கும், வேலூா் அரசினா் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன. காட்பாடி உழவா் சந்தை காந்திநகா் டான்போஸ்கோ பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொதுமுடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேதாஜி மாா்க்கெட் சில்லறை, மொத்த காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை மீண்டும் நேதாஜி மாா்க்கெட்டிலேயே நடைபெற்று வருகிறது. இதன்தொடா்ச்சியாக, உழவா் சந்தைகளையும் பழைய இடங்களிலேயே நடத்திட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, டோல்கேட் உழவா் சந்தையும், காட்பாடி உழவா் சந்தையும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வழக்கமான இடங்களிலேயே செயல்படத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT