வேலூர்

கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழக அரசின் கல்வி உதவித் தொகை பெற கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியாா் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் (பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

இதில், அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் இப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழில்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்தக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பப் படிவங்களை அவரவா் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தலாக இருந்தால் நவம்பா் 10-ஆம் தேதிக்குள்ளாகவும், புதிய இனங்களாக இருந்தால் 30-ஆம் தேதிக்குள்ளாகவும் பூா்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களிலேயே சமா்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் மாணவா்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை டிசம்பா் 15-ஆம் தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை ஜனவரி 31-ஆம் தேதிக்குள்ளாகவும் இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட் டோா், சிறுபான்மையின நல அலுவலகத்தை அணுகலாம்.  அரசு இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்பப்படிவங்கள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT