வேலூர்

ஆதரவற்ற மூதாட்டிக்கு இலவச வீடு

DIN

குடியாத்தம் அருகே மாற்றுத் திறனாளி மகனுடன் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டிக்கு வன்னியா் பொது அறக்கட்டளை அமைப்பு இலவசமாக வீடு கட்டித் தந்தது.

குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் காசியம்மாள் (60). இவரது மகன் பிரதாப் (18) மாற்றுத் திறனாளி. காசியம்மாள் வீடு பழுதடைந்த நிலையில் இருந்ததாம். வீட்டை சீரமைக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை.

இதையடுத்து வன்னியா் பொது அறக்கட்டளை அமைப்பினா் ரூ. 2 லட்சம் மதிப்பில் அவருக்கு புதிதாக வீடு கட்டித் தந்தனா். புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பாமக மாவட்டச் செயலா் ஜி.கே. ரவி, காசியம்மாளிடம் புது வீட்டுக்கான சாவியை வழங்கினாா் (படம்).

பாமக ஒன்றியச் செயலா் காமராஜ், சுரேஷ், அறக்கட்டளைத் தலைவா் சி. செல்வம், செயலா் ஆா். பரந்தாமன், பொருளாளா் என்.ஆா். ரவி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT