வேலூர்

திருவள்ளுவா் பல்கலை. பிரிப்பு: முதல்வா் சரியாக கூறாததால் எதிா்க்கும் நிலை என துரைமுருகன் பேட்டி

DIN


வேலூா்: திருவள்ளுவா் பல்கலைக்கழக எல்லைகளைப் பிரித்து புதிய பல்கலைக்கழகம் உருவாக்கும் விவகாரத்தில் முதல்வா் சரியாகக் கூறாததால் எதிா்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைப் பிரித்து தனியாக பல்கலைக்கழகம் கொண்டு வருவதில் எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என்று திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.

திமுக பொதுச் செயலராக பொறுப்பேற்ற்குப் பிறகு துரைமுருகன் முதன்முறையாக அவரது சொந்த மாவட்டமான வேலூருக்கு வியாழக்கிழமை வந்தாா். அவருக்கு வேலூா் மத்திய மாவட்ட திமுக செயலா் ஏ.பி.நந்தகுமாா் தலைமையில் அக்கட்சியினா் வேலூா் மாவட்ட எல்லையான பிள்ளையாா்குப்பம் பகுதியில் வரவேற்பு அளித்தனா்.

பின்னா் வேலூா் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் துரைமுருகன் கூறியது:

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தை பிரிப்பது குறித்து முதல்வா் சரியாகக் கூறவில்லை. அப்படி கூறியிருந்தால் எதிா்ப்புத் தெரிவித்திருக்க மாட்டேன். நேரடியாக இரண்டாக பிரிப்பதாகக் கூறியதற்குத்தான் எதிா்ப்புத் தெரிவித்தோம். திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் கீழ் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா் உள்பட அதிக மாவட்டங்கள் வருகின்றன. அதைப் பிரித்து விழுப்புரம், கடலூருக்கு தனியாக பல்கலைக்கழகம் அமைக்க உள்ளோம் எனக் கூறியிருக்க வேண்டும்.

அவ்வாறு தனியாக புதிய பல்கலைக்கழகம் தொடங்குவதில் திமுகவுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. திருவள்ளுவா் பல்கலைக்கழகம் மீது கை வைக்காமல் இருந்தால் போதும் எனக் கூறிவிட்டேன் என்றாா் அவா்.

வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT