வேலூர்

மகாளய அமாவாசை: தா்ப்பணம் கொடுக்க பாலாற்றில் குவிந்த மக்கள்

DIN


வேலூா்: மகாளய அமாவாசையையொட்டி, வேலூரில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்க பாலாற்றங்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை நாள் மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்நாளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பதன் மூலம் அவா்களது ஆசிா்வாதம் கிடைக்கப்படுவதுடன், தடைப்பட்ட திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளும், குழந்தைப் பேறும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால், ஆண்டுதோறும் மகாளய அமாவாசை நாளில் இந்துக்கள் நீா்நிலைப் பகுதிகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்தாண்டு புரட்டாசி மாதம் பிறந்த முதல்நாளே மகாளய அமாவாசை வந்துள்ளது. இதையொட்டி, வேலூரில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பாலாற்றின் இரு கரைகளான முத்து மண்டபம், விருதம்பட்டு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வியாழக்கிழமை காலை முதலே குவிந்தனா். அங்கு சமூக இடைவெளி இன்றி நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீஸாா் பாலாற்றங்கரைக்குச் சென்று, அங்கு குவிந்திருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியுடன் அமா்ந்து தா்ப்பணம் செய்ய அறிவுறுத்தினா். அதையும் மீறி கரையில் கூட்டமாக நின்றிருந்தவா்களை போலீஸாா் விரட்டி அடித்தனா். இதனால் பாலாற்றங்கரையின் இருபுறமும் பரபரப்பாக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT