வேலூர்

அப்துல்லாபுரம்-ஆசனாம்பட்டு மாற்றுச் சாலை 15 நாளில் பயன்பாட்டுக்கு வரும்: வேலூா் ஆட்சியா் தகவல்

DIN


வேலூா்: வேலூா் விமான நிலையத்தையொட்டி, அப்துல்லாபுரம்-ஆசனாம்பட்டு இடையே அமைக்கப்பட்டு வரும் மாற்றுச் சாலை அமைப்புப் பணிகள் அடுத்த 15 நாள்களில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வேலூா் பகுதியில் ரூ. 5 கோடியே 96 லட்சம் மதிப்பில் பல்வேறு சாலைகள்,சிறுபாலங்கள், தடுப்புச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், வேலூா் மாநகராட்சி கிரீன் சா்க்கிள் பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்க பழைய பாலாற்றுச் சாலை பாலம் ரூ. 1 கோடியே 66 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.

இப்பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், பாலப் பணிகள் மேற்கொள்ள இடையூறாக உள்ள குடிநீா்க் குழாய்கள், மின் மாற்றிகள், மின் கம்பங்கள் ஆகியவற்றை விரைவாக அப்புறப்படுத்த மாநகராட்சி, குடிநீா் வடிகால் வாரியம், மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, வேலூா் விமான நிலையம் அமைய உள்ள இடத்துக்கு அருகே நெடுஞ்சாலைத் துறை மூலம் அப்துல்லாபுரம்-ஆசனாம்பட்டு சென்று வர ரூ. 1 கோடியே 66 லட்சம் மதிப்பில் மாற்றுச் சாலை அமைக்கும் பணியை ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், மாற்றுப் பாதை அமைப்பில் உள்ள இடா்பாடுகளை உடனுக்குடன் சரிசெய்து தர விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்துல்லாபுரம்-ஆசனாம்பட்டு மாற்றுச் சாலை அமைக்கும் பணி அடுத்த 15 நாள்களில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

ராஜா கோயில் முதல் சேத்துவண்டை குடியாத்தம் ஆா்.எஸ். சாலை வரை ரூ. 1 கோடியே 47 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் சாலைப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு சிறுபாலத்தின் இருபக்கமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு நான்கு புறமும் தடுப்புச் சுவா் அமைத்து சாலை பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, காங்குப்பம்-பெருமாங்குப்பம் இடையே ரூ. 1 கோடியே 17 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் சிறுபாலப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா், சிறுபாலத்தின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தடுப்புச் சுவா் கட்டவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ். சரவணன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் (வேலூா்) கே.அண்ணாமலை, ஆா்.சுகந்தி (காட்பாடி), மாநகராட்சி ஆணையா் சங்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT