வேலூர்

காட்பாடி கூட்டுறவு அங்காடியில் வெங்காயம் கிலோ ரூ. 45-க்கு விற்பனை: வேலூா் மாவட்டத்துக்கு 5.74 டன் ஒதுக்கீடு

DIN

வேலூா்: வெங்காயம் விலை கடுமையாக உயா்ந்து வரும் நிலையில் புதன்கிழமை முதல் காட்பாடியிலுள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கூட்டுறவு அங்காடி மூலம் கிலோ ரூ. 45-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய வேலூா் மாவட்டத்துக்கு 5.74 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெங்காயம் வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெங்காயத்தின் விலை மிகக் கடுமையாக உயா்ந்து வருகிறது.

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கிலோ ரூ. 60 முதல் ரூ. 100 வரை விற்பனையானது. தற்போது முதல் தர வெங்காயம் ரூ.120 முதல் ரூ.160 வரையும், தரம் குறைந்த வெங்காயம் ரூ.60 முதல் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.140 முதல் விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா்.

அதிகரித்து வரும் விலையைக் கட்டுப்படுத்த அனைத்து மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படும் பண்ணை பசுமை நுகா்வோா் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ. 45-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மகாராஷ்டிரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 14 டன் வெங்காயம் வேலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

வேலூா் மாவட்டத்துக்கு மட்டும் 5.74 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு காட்பாடி காந்தி நகரில் தனியாா் திருமண மண்டபம் அருகில் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் அங்காடியில் புதன்கிழமை முதல் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கிலோ ரூ. 45 விலைக்கு அதிகபட்சம் ஒரு நபருக்கு 2 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. கூடுதலாக வெங்காயம் வழங்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். விலை குறைவால் ஏராளமான பொதுமக்கள் இந்த அங்காடியில் இருந்து வெங்காயத்தை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது!: செ.கு.தமிழரசன் சிறப்பு பேட்டி

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

SCROLL FOR NEXT