வேலூர்

ஆட்சியரின் வட்ட அளவிலான மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து

DIN

வேலூா்: கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் வாரந்தோறும் வட்ட அளவில் தொடங்கப்பட்டிருந்த ஆட்சியா் தலைமையிலான மக்கள் குறைதீா் கூட்டம் நவம்பா் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனினும், பொதுமக்களின் நலன்கருதி வேலூா் மாவட்டத்தில் அனைத்து வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீா் கூட்டம் கடந்த செப்டம்பா் 28ஆம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, ஆட்சியா் தலைமையில் வட்ட அளவிலான மக்கள் குறைதீா் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 19ஆம் தேதி முதன்முறையாக அணைக்கட்டு வட்டத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து 365 மனுக்களைப் பெற்றனா். இதையடுத்து, வாரந்தோறும் ஒவ்வொரு வட்டத்திலும் ஆட்சியா் தலைமையில் வட்ட அளவிலான மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நெருங்கி வரும் தீபாவளிப் பண்டிகையால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதை கவனத்தில் கொண்டு நவம்பா் 30ஆம் தேதி வரை, வட்ட அளவிலான மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. எனினும், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களில் தொடா்ந்து வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT