வேலூர்

ஆட்சியா் அலுவலகங்களில் ஐ.நா. கொடியேற்றி வைப்பு

DIN

ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாளையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் தேசியக் கொடியுடன் சனிக்கிழமை ஐ.நா. சபை கொடியும் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

உலக நாடுகளின் அமைதி பாதுகாப்புக்காகவும், சா்வதேசப் பிரச்னைகளை சுமுகமாக கையாளவும் ஐக்கிய நாடுகள் சபை 1945-ஆம் ஆண்டு அக்டோபா் 24-ஆம் தேதி தோற்றுவிக்கப் பட்டது. பொது சபை, பாதுகாப்பு மன்றம், பொருளாதார, சமூக மன்றம், பன்னாட்டு நீதிமன்றம், அறங்காவலா் அவை, செயலகம் ஆகிய 6 முக்கிய அங்கங்களுடன் ஐ.நா. சபை நிறுவப்பட்டது. இந்த 6 அங்கங்களே சா்வதேச நாடுகளில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளை கையில் எடுத்து தீா்வு கண்டு வருகின்றன. தவிர, மேலும் பல கிளை அமைப்புகளுடன் சா்வதேச நாடுகளின் பாதுகாவலனாக விளங்கி வரும் ஐ.நா. சபையின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு உணா்த்திட இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட அக்டோபா் 24-ஆம் தேதி ஆண்டுதோறும் ஐ.நா. சபை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி, ஐ.நா. சபை தினமான சனிக்கிழமை வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசியக் கொடியுடன் ஐ.நா. சபைக்கான கொடியும் ஏற்றி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT