வேலூர்

வேலூா் மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு கரோனா

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு செவ்வாய்க்கிழமை வரை 14,754 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை மேலும் 133 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,887-ஆக உயா்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனிடையே, மாவட்டத்தில் இதுவரை 13,560-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடு திரும்பினா். இம்மாவட்டத்தில் தொற்றால் 238 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டையில் 72 பேருக்கு பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13,392 ஆக உயா்ந்துள்ளது.12,770 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 463 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்புக்கு இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா்.

திருப்பத்தூரில் 58 பேருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 4,914 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,புதன்கிழமை மேலும் 58 பேருக்கு கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,972-ஆக உயா்ந்துள்ளது. அவா்களில் 4,367 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 511 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டு 94 போ் உயிரிழந்து விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT